Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2019 09:22:13 Hours

இராணுவத்தின் புதிய தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற கண்டுபிடிப்புகள் அறிமுகம்

இலங்கை இராணுவத்தின் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி கிளை செயல்திறனுக்கான நிர்வாக தொழில்நுட்ப தேவைகளை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்பு நுட்பங்களை உற்பத்திசெய்வதில் இராணுவமானது வெற்றி பெற்றுள்ளன.

அதன்படி இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி கிளையினாரால் (19) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத் தலைமையகத்தில் வைத்து அவர்களின் புதிய தொழிநுட்ப ஆய்விலான தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டன. இவைகளை பார்வையிட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும் வருகை தந்தார். மேலும், இது இராணுவத்தில் வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் அதே நேரத்தில் இது படையினரின் புதிய திருப்புமுனையின் அடையாளமாக காணப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் பீரங்கி தீ கட்டுப்பாட்டு அமைப்பு - 'ஸ்ரீ மனா', கையால் வைத்திருக்கும் பிலாஸ்டிக் கல்குலேட்டர், பல ஒருங்கிணைந்த மேம்பட்ட ஆயுத சிமுலேட்டர் அமைப்பு, டி -56 சிறிய ஆயுத துப்பாக்கி சூடு சிமுலேட்டர், வாகன ஸ்கேனிங் , தேசிய மற்றும் சர்வதேச விருது பெற்ற புதிய கண்டுபிடிப்புகள், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அமைப்புகளிலும் இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் இக் குழுவினரால் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அந்த புதிய கண்டுபிடிப்புகளை பெரிதும் கருத்திற் கொண்ட இராணுவத் தளபதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இராணுவத்தில் தொடர்புடைய கண்டுபிடிப்புக்களின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் காட்சிக்கு வைக்கப்பட்ட அவர்களின் சிறப்பான தயாரிப்புகளை முன்னிட்டு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார், அதே நேரத்தில் சேவையிலுள்ள படையினர் மற்றும் பயிற்சி கல்லூரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக அந்த கண்டுபிடிப்புக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களின் அதிகளவான உற்பத்திக்கான சாத்தியப்பாடுகளை ஆராய அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கிளை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரேணுகா ரோவல், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா, தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி, காலாட்படை பணிப்பாளர், பீரங்கி படைத் தளபதி மற்றும் கேணல் சுதாத் உபயசேன, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மேற்பார்வை பணிப்பாளர் மற்றும் அவரது குழு உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Sportswear free shipping | Men's Footwear