19th December 2019 15:56:39 Hours
மிஹிந்து செத் மெதுரு, அபிமன்சல 1, 2, 3 நிலையம் , ரணவிரு ராகம மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் விஷேட தேவையுடைய இராணுவ போர் வீரர்கள் 330 பேருக்கு அவர்களை கௌரவிக்கும் முகமாக ரீகல் சினிமா சாலையில் புளக் பிளாஸ்டர் பனிபாத் ஹிந்தி படக் காட்சிகலும் இலவசமாக காண்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஹில்டன் ஹோட்டலில் பகல் விருந்தோம்பலும் இன்னிசை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வுகளில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் வருகை தந்து இந்த போர் வீரர்களுடன் இணைந்து விநோதமுற்று மகிழ்ந்தனர்.
ரீகல் சினிமா சாலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியார் மங்கள விளக்குகளை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். இங்கு வருகை தந்த விஷேட தேவையுடைய படை வீரர்கள் விநோதமாக தங்களது காலங்களை களித்தனர்.
பின்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற பகல் விருந்தோம்பல் நிகழ்வுகளில் இந்த விஷேட தேவையுடைய போர் வீரர்கள் இணைந்துகொண்டு அங்கு இடம்பெற்ற புகழ் பெற்ற கலைஞர்களான ருகந்த குணதிலக, உரேஷா ரவிஹாரி, நலின் பெரேரா, ரைனி சாருக, சுனில் பெரேரா, லஹிரு பெரேரா போன்றோராலும் முன் வைக்கப்பட்ட இன்னிசை நிகழ்வுகளில் கலந்து கொண்டு இன்பமுற்று மகிழ்ந்தனர்.
தாய் நாட்டிற்காக அவயங்களை இழந்து போர் வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் இராணுவ சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளின் ஊடாக இராணுவ தளபதியும் படையினர்களுடன் இணைந்து இவர்களுடன் இன்பமுற்றனர்.
இந்த நிகழ்வில் இணைந்து கொண்ட கலைஞர்களுக்கு இராணுவ தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவியினால் நினைவு பரிசுகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டது. அத்துடன் சேவா வனிதா பிரிவின் நிறைவேற்று முகாமையாளர் திருமதி குமுதினி வனிகசூரிய மற்றும் திருமதி லுட்மிலா டி சில்வா போன்றோர் இணைந்து கொண்டார். . Sports News | Nike for Men