Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2019 02:29:02 Hours

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் புதிய தளபதி தனது கடமையினை பொறுப்பேற்கும் நிகழ்வு

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 13 ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் ஆர்.எல்.சி பெர்னாண்டோ அவர்கள் தனது கடமையினை கடந்த (10) ஆம் திகதி செவ்வாய்கிழமை இராணுவ போர்கருவி படை தலைமையகத்தில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப் புதிய தளபதியை இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ்.என்.ஏ திஸாநாயக அவர்கள் பிரதான நுழைவாயில் வைத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் மங்கள விளக்கேற்றலுடன் புதிய வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படை தளபதி அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அத்துடன் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து குழு புகைப்படத்தில் கலந்துகொண்ட அவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்தார்.பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

மேலும் தளபதியவர்கள் தனது உரையின்போது அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் ஒழுக்கத்துடன் ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பாக படையினர் மத்தியில் எடுத்துரைத்தார் . Running sports | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov