18th December 2019 21:28:26 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நவஜீவனம் மெதடிஷ் திருச்சபையிலுள்ள ‘அருளம்மா’ சிறுவர் அபிவிருத்தி நிலைய மண்டபம் இம் மாதம் (16) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களுக்கு திருச்சபையினால் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இராணுவத்தின் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் சீன தூதரக நிதி உதவியுடன் இலங்கை இராணுவ கட்டிட நிர்மான பணியாளர்களுடன் பங்களிப்புடன் சிறுவர் அபிவிருத்தி நிலையமானது மீள்நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
இந்த கட்டிடத்தை இலங்கை மெதடிஸ் திருச்சபையின் தலைவர் வணக்கத்துக்குரிய பிதா ஆசிரி பி. பெரேரா அவர்களினாலும் , சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் செங் குயான்ஜ் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சில்வா அவர்கள் வருகை தந்து திறந்து வைத்தனர்.
மேலும் இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலுள்ள 35 மாணவர்களுக்கு இந்த அதிதிகளினால் பாடசாலை உபகரண பொதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் ஏழு கனனி இயந்திரங்கள் இந்த நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
நவஜீவன மெதடிஸ்ட் தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய பிதாவான அருன புஸ்பராஜ் அவர்களினால் இந்த நிகழ்வினூடாக இராணுவத்தினரால் ஆற்றிய பணிகளுக்கான நன்றிகளை தெரிவித்து இராணுவத்தினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மெதடிஸ்ட் திருச்சபையின் தலைவரான வணக்கத்திற்குரிய பிதாவான டெரன்ஷ் சில்வஸ்டர், முன்னாள் மாகான மந்திரி திரு குருகுலராசா, 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் U.L.J.S பெரேரா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். jordan Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News