Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2019 16:59:33 Hours

மின்சார பொறியியல் படையணியின் நூல் வெளியீட்டு விழா

இலங்கை மின்சார பொறியியல் படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் இரவு விருந்தோம்பல் நிகழ்வானது கொழும்பு கிங்ஷ்பரி ஹோட்டலில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் வருகை தந்தனர். இவர்களை மின்சார பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாஹ மற்றும் அவரது பாரியாரான திருமதி சிறிநாக அவர்கள் வரவேற்றனர்.

‘70 வசரக பியசடஹன’ எனும் பெயரில் இந்த ஆண்டு நிறைவின் நூலானது வெளியிடப்பட்டன. இந்த படையணியானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த படையணியானது இராணுவத்திலுள்ள கனரக வாகனங்கள், வாகனங்கள் இயந்திர உபகரணங்களை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் யுனிபவல் கௌச வாகனங்களை இலங்கையில் தயாரித்து பாதுகாப்பு தரப்பினருக்கு விநியோகித்து வருகின்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் நிகழ்வில் சிறப்புரையொன்றை ஆற்றினார். பின்பு மின்சார பொறியியல் படையணியின் படைத் தளபதி அவர்களினால் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார். இந்த நிகழ்வில் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன , இராணுவ உயரதிகாரிகள் , ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் வருகை தந்தனர். Sportswear free shipping | NIKE HOMME