Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2019 07:10:02 Hours

படைத் தலைமையங்களுக்கிடையிலான விஜயத்தினை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தளபதி

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் 62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள படைத் தலைமையகங்களுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை டிசம்பர் 12-13 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.

விஜயத்தினை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தளபதியவர்களுக்கு இராணுவ மரியாதையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் 62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை முன்னிட்டு தளபதியவர்கள் ஒரு சந்தன மரக்கன்றினை தலைமையக வளாகத்தில் நட்டார். அதனைத்தொடர்ந்து 62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியினால் தனது படைத் தலைமையகத்தினுடைய பணி மற்றும் வகிபாகம் பற்றிய விளக்கங்களை வருகை தந்த தளபதியவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இரண்டாவது கட்டமாக மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் 621,622,623 ஆவது படைத் தலைமையகங்கள் மற்றும் அதன் கீழுள்ள பட்டாலியன்களுக்குமான தனது விஜயத்தினை மேற்கொண்டார்.மேலும் அவர் 11ஆவது இலங்கை பீரங்கி படையணி, 9ஆவது கஜபா படையணி,14 ஆவது(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 17ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி உள்ளிட்ட படையணிகளையும் சென்று பார்வையிட்டார்.

அடுத்ததாக அவர் 623ஆவது படைத் தலைமையகம், 9ஆவது கஜபா படையணி,622623ஆவது படைத் தலைமையகம்,20ஆவது கஜபா படையணி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.

62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, 621,622 மற்றும் 623ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளைத் தளபதிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்,62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கட்டளை அதிகாரிகள் உட்பட பலர் இவ்விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.buy shoes | UK Trainer News & Releases