17th December 2019 11:40:39 Hours
‘வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது; தற்கால போக்குகள் மற்றும் சவால்கள்’ எனும் தொணிப்பொருளிலான இரண்டாவது கருத்தரங்கானது 2019 டிசம்பர் 19 - 20 திகதிகளில் இராணுவ மற்றும் சிவில் அறிஞர்களின் பங்கேற்புடன் புத்தலயிலுள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் சிப்புரையாற்றுவார்.
இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் மத்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களின் அழைப்பின்பிரகாரம், பல அறிஞர்கள்,சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் ஜயவர்தன,மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, திருமதி மனிஷா எஸ். வனசிங்க பாங்கல் மற்றும் டொக்டர் சமில தலங்கல ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றுவர்.
பண்டாரநாயக்க சர்வதேச கற்கைநெறி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஹரிந்த விதானகே,கேணல் டிகேஎஸ்கே தொலகே,கேணல் ஏஎம்சிபி விஜயராத, திரு அஷான் விக்ரமசிங்க, திரு ஆசிப் பௌட்,டொக்டர் சஞ்ஜீவ வீரவரண, லெப்டினன் கேணல் பிஎஸ்எஸ் சஞ்ஜீவ, திரு இந்திக பெரேரா (சுயாதீன சட்டத்தரணி), திரு நிலந்தன் நிருந்தன்(பிசிஐஎஸ்) மற்றும் மேஜர் டிபி அலுத்கே ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவர். Running sports | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat