Header

Sri Lanka Army

Defender of the Nation

17th December 2019 12:19:39 Hours

வன்னி படையினரால் பொது மக்களிற்கான நடமாடும் சேவை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க மாத்தரை லயன்ஸ் கழகத்தால் பொது மக்களிற்கான கண் கிளினிக் தொடர்பான நடமாடும் சேவை இப் படைத் தலைமையகத்தில் ஞாயிற்றுக் கிழமை (15) இடம் பெற்றது.

இந் நடமாடும் சேவையில் 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தமது கண் பார்வை பரிசோதனைகளை பரிசோதித்துக் கொண்டனர்.

அந்த வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாத்தரை லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்பில் இந் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வுகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜி ஏ எல் கித்சிறி அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி மாத்தரை லயன்ஸ் கழகத்தின் பணிப்பாளரான திரு ஹேமபிரிய ஜயதிலக உயர் அதிகாரிகள் இப் படைத் தலைமையக அதிகாரிகள் சிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Buy Kicks | Nike Air Max 270