16th December 2019 07:39:53 Hours
இலங்கை இராணுவத்தின் படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (15) ஆம் திகதி கொழும்பு -15 இல் அமைந்துள்ள ரொக்ஹவுஷ் படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த ஆண்டு நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும் பதவிநிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் வருகை தந்தார் இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மற்றும் கனரக வாகன அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள படைக்கலச் சிறப்பணியின் நினைவு தூபி வளாகத்தினுள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு படுத்தும் முகமாக மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பங்களிப்புடன் நிகழ்வு இடம்பெற்றன.
ஆண்டு நிறைவு நிகழ்வின் போது 4 ஆவது படைக்கலச் சிறப்பணிக்கு விளையாட்டு துறையில் சாதனைகளை நிலை நாட்டியதற்கு பதக்க கேடயங்களும், 5 ஆவது படைக்கலச் சிறப்பணியானது சிறந்த பயிற்சி படையணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளும் படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் படைக்கலச் சிறப்பணியின் படையினரது பங்களிப்புடன் தலைமையக மைதானத்தில் விநோத விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. best shoes | Men’s shoes