17th December 2019 09:19:39 Hours
வன்னி பிரதேசத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு 211 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (14) ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு பாடசாலைகள் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்த பாடசாலை உபகரணங்கள் மக்கள் வங்கி மற்றும் பௌத்த சங்கத்தின் பூரன நிதி அனுசரனையுடன் இடம்பெற்றன. களுகுன்னமடுவ, பெரகும் வித்தியாலய, அலகல்ல வித்தியாலயம், ஆறுகம் புல்லிலய வித்தியாலய முன்பள்ளிகளைச் சேர்ந்த தரம் 1 – 5 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் L.P. K. C விஜயதுங்க அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | adidas Yeezy Boost 350