Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2019 03:29:02 Hours

66 ஆவது படைப் பிரிவின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா

கிளிநொச்சி பூனகிரியில் அமைந்துள்ள 66 ஆவது படைப் பிரிவின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 10 – 11 ஆம் திகதிகளில் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இம் மாதம் பத்தாம் திகதி படைப் பிரிவின் ஆண்டு நிறைவை முன்னிட்டு படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் இணைந்து கொண்டார்.

வென்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் 35 பேருக்கு 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் (11) ஆம் திகதி பகல் விருந்தோம்பல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பின்னர் மாலை வேளை போதி பூஜை ஆசிர்வாத அனுஷ்டான சமய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்து பூனகிரி ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். latest jordans | Entrainement Nike