10th December 2019 13:10:47 Hours
இலங்கை பீரங்கிப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி இலக்கம் – 45 இன் கீழ் இளம் அதிகாரிகள் பயிற்சிகளை மின்னேரியவிலுள்ள பீரங்கிப் படையணியின் பயிற்சி முகாமில் மேற்கொண்டு பயிற்சிகளை நிறைவு செய்தனர்.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் K.N.S கொடுவேஹொட அவர்கள் வருகை தந்தார். இவரை மின்னேரிய பீரங்கிப் படையணி பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் M.P கருணாரத்ன அவர்கள் வரவேற்றார்.
பயிற்சியை திறமையாக மேற்கொண்டு சிறப்பான பெறுபேறுகளை இரண்டாம் லெப்டினனான H.G.J.K.D பதிராஜா அவர்கள் பெற்றுக் கொண்டு ‘ வெள்ளி துவக்கு” பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டு பயிற்சி அதிகாரிகளின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்தோம்பலிலும் உயரதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Sneakers