16th December 2019 07:39:53 Hours
இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் அரியாலையிலுள்ள ‘சன்முகா’ பூம்புகார் முன்பள்ளி சிறார்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு பூங்கா நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (14) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு பூங்காவனது றொட்டரி கழகத்தின் பூரன நிதி அனுசரனையுடன் இராணுவ நிர்மான பணியார்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு றொட்டரிக் கழகத்தின் தவிசாளர் திரு P.H.F சரவணன் சௌந்தர்ராஜன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வருகை தந்து இந்த பூங்காவை திறந்து வைத்து முன்பள்ளியிலுள்ள சிறார்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
பூங்காவின் நிர்மான பணிகள் 52, 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 12 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணி மற்றும் 5 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் பூரன பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் 52 ஆவது படைத் தளபதிகள், கொழும்பு றொட்டரிக் கழகத்தின் அங்கத்தவர்கள், யாழ் காணிப் பிரிவின் பிரதி மாவட்ட செயலாளர், பெற்றோர்கள் மற்றும் சிறார்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (முன்பள்ளி திறந்து வைப்பு பக்கங்களை இணையதளத்தில் பார்க்கலாம்) best Running shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp