Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2019 14:28:45 Hours

இராணுவ படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (4) ஆம் திகதி மோதர ஜூம்மா பள்ளிவாசலிலும், மோதர புனித அன்டோர்வ்ஷ் கிறிஸ்த்தவ தேவாலயத்திலும் ஆசிர்வாத பிறார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன.

இம் மாதம் (5) ஆம் திகதி மோதர ஶ்ரீ வெங்கடேஷ்வரர் கோயிலில் விஷேட ஆசிர்வாத பூஜை வழிபாடுகளும், இம் மாதம் (09) ஆம் திகதி இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் பௌத்த சமய ஆசிர்வாத அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்று மறுநாள் (10) ஆம் திகதி அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் பௌத்த சமய ஆசிர்வாத அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்றன. மறுநாள் (10) ஆம் திகதி இராணுவ பதவிநிலை பிரதானியும், படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

இம் மாதம் (15) ஆம் திகதி படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நினைவு தினமானது அனுஷ்டிக்கப்படவிருப்பதனால் இதற்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | THE SNEAKER BULLETIN