12th December 2019 14:21:45 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவிற்குரிய 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டில் கரம்புகுளத்தில் ஏற்பட்டிருந்த நீர் கசிவுகள் படையினரின் பங்களிப்புடன் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் L.A.J.L.B உடோவிட அவர்களது தலைமையில் 17 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 20 படையினரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. .
தேரங்கண்டல் பகுதியில் உள்ள பொதுமக்கள் இராணுவத்தினரது புணரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தானாக முன்வந்து இராணுவ படையினருடன் இணைந்திருந்து உதவிகளை மேற்கொண்டனர். படையினரால் மேற்கொண்ட இந்த பணிகளுக்கு இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களால் இராணுவத்தினருக்கு பராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் நாச்சிக்குடா கிராமசேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் , 65 ஆவது படைப் பிரிவினரால் கடந்த நான்கு நாட்கள் பெய்த அடைமழை நிமித்தம் வெள்ளத்தால் பாதிப்புற்ற பொது மக்களை படகுகளின் மூலம் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
அத்துடன் 65, 651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 (தொ) கஜபா படையணி, 19 இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் இம் மாதம் (6) ஆம் திகதி வெள்ளத்தால் பாதிப்படைந்த பொது மக்களுக்கு சூடான உணவு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. தளபதி 651 படைப்பிரிவின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு 11 (வி) ஜி.ஆர், 19 எஸ்.எல்.எல்.ஐ மற்றும் 20 (வி) வி.ஐ.ஆர் துருப்புக்கள் 65 பிரிவின் கீழ் வெள்ளிக்கிழமை (6) துருப்புக்களால் சூடான உணவு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 57, 65 மற்றும் 66 ஆவது படைப் பிரிவின் பூரன ஒத்துழைப்புடன் சாந்திபுரம், அரவிவளநகர், வசந்தநகர், விஸ்வமடு, தர்மபுரம், இரத்தினபுரம், கொடிகட்டையார்குளம், அரவிளானந்தகுளம், ஓடாரட்டுகுளம், குமாரஸ்வம்பிபுரம், பாரதிபுரம், கருவாலகன்டல், கொடைக்கல்லு, கனகரத்னபுரம் மற்றும் கடுவன்குடி பிரதேசங்களில் அனர்த்த பணிகளை மேற்கொண்டனர்.
இரனைமடு நீர்த்தேக்கத்தின் எட்டு சதுப்பு வாயில்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, மேலும் கிலிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடை மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு முகமளிக்கும் முகமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 9 ஆவது பொறியியல் படையணியின் பங்களிப்புடன் பரந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு ஏ 35 பிரதான வீதிகளில் சேதமடைந்த வள்ளிபுரம் 80 அடி பாலமானது படையினரால் மீள் புணரமைக்கப்பட்டு மக்களது போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டன.best Running shoes brand | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf