09th December 2019 14:00:51 Hours
621ஆவது படைப் பிரிவில் சேவையாற்றும் 14ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் அவர்களது நன்கொடையின் மூலம் வெலிஓய பிரதேச செலயலகத்திற்கு உட்பட்ட மிகவும் வருமைக் கோட்டின் கீழ் காணப்படும் 08 பிரதேசங்களை உள்ளடக்கிய 231 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்விற்கான நன்கொடையானது திரு பிரசாத் லொகு பாலசூரிய மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் போன்றவற்றை சேர்ந்த தமது சகாக்களின் ஒருங்கிணைப்பில் நன்கொடை வழங்கப்பட்டதுனட் இந் நிகழ்வில் பாடசாலை பைகள் தண்ணீர் போத்தல்கள் புத்தகப் பைகள் அப்பியாசக் கொப்பிகள் கம் போத்தல்கள் அழி ரப்பர்கள் பென்சில்கள் நிறப் பென்சில்கள் ஸ்டிகர்கள் 12 கலர் பெண்சில்கள் போன்ற சுமார் 1மில்லியன் ருபா பெறுமதியிலான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்;ந்து நான்கு நன்கு நன்கொடையாளர்களும் இப் பாடசாலைகளுக்கு சென்று வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான இவ் உபகரணங்களை வழங்கினர்.
இந் நிகழ்வில் வெலிஓய பிரதேச கல்விப் பணிப்பக பணிப்பாளர் 62ஆவது மற்றும் 621ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் 14ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பெற்றோர் மாணர்வகள் போன்றோர் கலந்து கொண்டனர். Sportswear Design | New Releases Nike