Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2019 13:00:47 Hours

பிரதி பதவிநிலை பிரதானி ‘ரணவிரு எபரலிற்கு விஜயம்

யக்கலையிலுள்ள ‘ரணவிரு எபரல்’ ஆடைத் தொழிற்சாலைக்கு பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரத்ன அவர்கள் முதல் விஜயத்தை இம் மாதம் (2) ஆம் திகதி மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த பிரதி பதவிநிலை பிரதானியை ‘ரணவிரு எபரல்’ ஆடைத் தொழிற்சாலையின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க மற்றும் பிரிகேடியர் கபில ரணவீர அவர்களையும் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் இங்கு வருகை தந்த பதவிநிலை பிரதானியவர்கள் இந்த தொழிற்சாலையிலுள்ள தொழில் நுட்ப அறைகள், இயந்திரங்களை பார்வையிட்டு அங்குள்ள உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு இந்த தொழற்சாலையில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இந்த தொழிற்சாலையில் 500 ஆண், பெண் ஊழியர்கள் சேவையாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | Nike