Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2019 16:44:04 Hours

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பயிற்சி பட்டறை

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அதன் செயற்பாடுகள், ஆயுத மோதலில் இருந்து சட்ட அமுலாக்கத்திற்கு மாற்றம், சட்ட அமுலாக்க அதிகாரங்கள், பிந்தைய மோதல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலுக்கான சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளையும் குறித்தும் இராணுவ அதிகாரிகளின் அறிவைப் மேம்படுத்தும் நோக்கத்துடன் செயலமர்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் இம் மாதம் 3 – 4 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் விரிவுரையாளர்களின் உதவியுடன் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பாளர் அவர்களது பங்களிப்புடன் இந்த செயலமர்வானது இடம்பெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் இராணுவத்தை பிரதிநிதித்துவ படுத்தி 20 அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர். இந்த செயலமர்வின் மூலம் இராணுவ அதிகாரிகள் மதிப்புமிக்க அனுபவத்தை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் latest jordans | Nike