06th December 2019 08:32:40 Hours
மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசலையின் பயிற்சி இல 26 கிளர்ச்சி ஜங்கள் வேபேர் பாடநெறியில் உள்ள சில வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட மாணவர் அதிகாரிகள், பாடத்திட்டத்தில் தங்களது அறிமுகம் தொகுதியின் ஒரு பகுதியாக டிசம்பர் 1-3 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை பார்வையிட விஜயத்தை மேற்கொண்டன.
இந்த விஜயத்தின் போது வருகை தந்த அதிகாரிகளை 591 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதிக்கு பாதிலாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வட்டுக்கள் உள்ள கண்ணிவெடியகற்றும் பிரதேசம் மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் பொறுப்பில் உள்ள முக்கிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இவர்கள் 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களை சந்தித்ததுடன் 64 ஆவது படைப் பிரிவின் பொறுப்புகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் பின்னர் 68 ஆவது படைப் பிரிவுக்கு விஜயம் செய்தனர்.
இந்த வருகையை மேற்கொண்ட இவர்கள் விஜயம் செய்த இடங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். Adidas shoes | NIKE AIR HUARACHE