06th December 2019 20:09:09 Hours
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கீரமலை முதல் பொன்னலை வரையிலான பி -75 சாலையில் 30 அடி நீளமுள்ள குசுமந்துரை பாலம் குறித்து (06) ஆம் திகதி வெள்ளிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கமைய 10 ஆவது பொறியியலாளர் படையணியின் படையினரால் 16 ஆவது கெமுனு ஹேவா படையணியுடன் இணைந்து சேதமடைந்த பாலம் மீள் புனரமைக்கப்பட்டது.
சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மழையால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பாலத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதன் விளைவாக, சாலையின் போக்குவரத்தை மீட்டெடுக்க சாலை மேம்பாட்டு ஆணையகம் இராணுவத்திடன் விடுத்த வேண்டுகோளுக்கமைய, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் பணிப்புரைக்கமைய 10 ஆவது பொறியியற் படையணியின் படையினரால், இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய இந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற 513 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 16 ஆவது கெமுனு ஹேவா படையணியுடன் இணைந்து 10 ஆவது பொறியியற் படையணியின் படையினர் ஒத்துழைப்பு வழங்கினர். இந்த பாலம் இப்போது புனரமைக்கப்பட்டு பொது மக்களின் போக்குவரத்துக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. jordan Sneakers | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth