06th December 2019 13:09:09 Hours
கடந்த வியாழக் கிழமை 5ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த. சாதாரண தர பரீட்ச்சாத்திகளுக்கான போக்குவரத்து வசதிகளானது, கிளிநொச்சி பாதுகாப்பு படையின் கீழுள்ள 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 6ஆவது இலங்கை சிங்க படையணியைச் சேரந்த படையினரால் இன்று காலை 6 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும், இவ் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 150 மாணவர்களை படையினர் டிராக்டர் மற்றும் படகு ஆகியவற்றை பயன்படுத்தி இந்து கல்லூரி மற்றும் தர்மபுரம் உள்ளிட்ட பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் கொண்டு சேர்த்தனர்.
அதேவேளை,வெள்ளத்தினால் பாதிப்புற்ற குறித்த இரண்டு பாடசாலைகளிலுள்ள தளபாடங்களை அகற்றுவதற்காக படையினர் தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய , 57ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் அதன் கீழுள்ள ஏனைய படைத் தலைமையகங்கள் உட்பட அனைவரும் இவ் வெள்ள அனர்த்தத்திற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர். Adidas shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News