Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2019 13:33:14 Hours

இராணுவ வீரர்களது சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஒழுங்குகள்

மாலித் தாக்குதலின் போது பலியான மேஜர் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம, சாஜன் எஸ்.எஸ் விஜயகுமார அவர்களது சடலங்கள் எதிர்வரும் மாதம் (2) ஆம் திகதி 3.10 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா, ஐக்கிய நாட்டு வதிவிட இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் செல்வி ஹனாஷ் சிங்கர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி அவர்களின் பங்களிப்புடன் இவரது சடலங்கள் வரவேற்கப்படும்.

இவரது சடலங்கள் ஐ.நா கொடிகள் போத்திய வண்ணம் லெப்டின ன்ட் ஜெனரல் டெனிஷ் கிலிஷ்போர் உட்பட மூன்று ஐ.நா அதிகாரிகளினால் இராணுவ தளபதி மற்றும் ஆளனி நிருவாக பணிப்பாளருக்கு பாரமளிக்கப்படும்.

பின்னர் இவர்களது சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு போய் பிரேத பரிசோதனையின் பின்பு அவர்களது ஊரான பொலன்னறுவை மற்றும் பொல்பிடிகமவிற்கு இராணுவத்தினரால் எடுத்துச் சென்று அவர்களது உறவினர்களுக்கு கையளிக்கப்படும்.

மாலியில் இம்மாதம் (25) ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலின் போது பலியான பொலன்னறுவையை பிறப்பிடமாவும் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரமவும், பொல்பிடிகம தலகொல்லாவையை பிறப்பிடமா கொண்ட 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ் விஜயகுமார அவர்களும் இந்த தாக்குதலின் போது பலியாகியுள்ளனர். Sports News | Zapatillas de running Nike - Mujer