Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2019 14:06:21 Hours

அமைதி காக்கும் பணி நிமித்தம் மாலி நாட்டிற்கு சென்ற இலங்கை இராணுவத்திற்கு குண்டுத் தாக்குதல்

(ஊடக அறிக்கை)

மாலி நாட்டிற்கு சமாதான பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியினரது கணரக வாகனங்களுக்கு மேற்கு ஆபிரிக்கா டுவென்ஷா பிரதேசத்தில் வைத்து மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயண்படுத்தி தாக்குதலொன்று இன்று காலை (25) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த்த கெப்டன் ஒருவரும் படை வீரரொருவரும் அந்த ஸ்தலத்திலையே கொல்லப்பட்டனர். மேலும் மூன்று படையினர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாட்டுத் தலைமையகம் பரிசீலனைகளை மேற்கொண்டு வருகின்றன. (முடிவு) Buy Kicks | Nike - Shoes & Sportswear Clothing