Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2019 19:38:06 Hours

பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

பிரித்தானிய ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் மதிப்புக்குரியள திரு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் இம் மாதம் (16) ஆம் திகதி சந்திந்தார்.

இச்சந்திப்பின் போது பிரித்தானிய ஐக்கிய இராச்சிய உயர் ஆணையாளரினால் இலங்கையில் கடந்த தினங்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த பணிகளின் போது இராணுவத்தினரால் மேற்கொண்ட சிறந்த மீட்பு பணி நடவடிக்கைகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்கின்ற துரித அபிவிருத்தி முன்னேற்றங்களுக்கு இராணுவ தளபதிக்கு பாராட்டை தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு லோசகரான கேர்ணல் டேவிட் அஷ்மன், குடியுரிமை அல்லாத பாதுகாப்பு ஆலோசகர், குரூப் கெப்டன் பிரேசர் நிக்கல்சன் அவர்கள் இணைந்திருந்தனர்.

இச்சந்திப்பின் இறுதியில் பிரித்தானிய ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் மதிப்புக்குரிய திரு ஜேம்ஸ் டோரிஸ் அவர்களினால் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இவரது வருகையையிட்டு கையொப்பமிட்டார்.

இவர் நாட்டை விட்டு செல்லும் முன்பு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார். Asics footwear | Sneakers