Header

Sri Lanka Army

Defender of the Nation

09th January 2019 15:41:23 Hours

ஐக்கியநாட்டு குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கியநாட்டு குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி ஹனா சிங்கர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக (9) ஆம் திகதி காலை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாட்டு குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான பணிகள் தொடர்பாக இராணுவ தளபதிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இறுதியில் இராணுவ தளபதியால் இந்த ஐக்கிய நாட்டு பிரதிநிதிக்கு அவரது வருகையை முன்னிட்டு நினைவுச் சின்னம் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். அச்சமயத்தில் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.எல்.பி.எஸ் திலகரத்ன அவர்களும் இணைந்திருந்தார். Sportswear free shipping | Shop: Nike