Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2019 17:41:40 Hours

தமிழ் பெண் நோயாளிக்கு இராணுவத்தினரது ஒத்தழைப்புடன் வீடொன்று நிர்மானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘சத்தாஹம் சுவ’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பௌத்த சங்கத்தின் அனுசரனையுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளியாக இருந்த ராசமலர் எனும் தமிழ் பெண்மணிக்கு குருமங்காடு கிராமத்தில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் வீடொன்று நிர்மானித்து வழங்கப்பட்டது.

இந்த வீட்டுத் திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் ‘சத்தாஹம் சுவ’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பௌத்த சங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இந்த பெண்மணி பல கஸ்ட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்ததை அவதானித்து இவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த வீடு நிர்மானித்து வழங்கப்பட்டது.

211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் தாரக ரத்னசேகர அவர்களது பூரன தலைமையில் இராணுவ படையினரது பங்களிப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் இடம்பெற்றது.

இந்த வீடு கையளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு ஐ.எம் ஹனீபா, 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிக்காரி கேர்ணல் தாரக ரத்னசேகர, வவுனியா சுகாதார பிரதி பணிப்பாளர், வைத்தியர்கள், வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate link trace | Nike Shoes