Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2019 16:21:39 Hours

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இராணுவ மிதிவெடி அகற்றும் பணிகளை பார்வை

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகளான ஜெஃப்ரி சார்லஸ் வென் ஓர்டன் மற்றும் வில்லியம் லெகெஜ், ஏர்ல் ஒப் டார்ட்மவுத் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அச்சமயத்தில் வவுனியாவில் பூஒயவில் அமைந்துள்ள இராணுவ பொறியியல் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயத்தை (4) ஆம் திகதி மேற்கொண்டனர்.

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இந்த பொறியியல் படைத் தலைமையகத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் மிதிவெடி அகற்றும் விபரங்கள் தொடர்பாகவும், இராணுவத்தில் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களினால் மிதிவெடி அகற்றும் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாகவும் ஒத்திகைகள் மூலம் இவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்சமயத்தில் இராணுவ பொறியியலாளர் படைத் தலைமையயகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.என் அமரசேகர, வெளிநாட்டு விவகார அமைச்சின் பிரதி பணிப்பாளர் செல்வி எம்.எல்.எப் மபூஷா அவர்களும் இணைந்திருந்தனர்.

மிதிவெடிகள் முழுமையாக 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை நிலப்பரப்பில் இருந்து விடுவிப்பதற்காக SLA HDU ஆல் ஏற்படுத்தப்பட்ட பங்களிப்பானது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் பாராட்டை ஏற்படக்கூடிய விடயமாக அமைந்திருந்தது. Nike sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos