Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2018 15:30:16 Hours

59 ஆவது படைப் பிரிவின் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் 593 ஆவது படைப் பிரிவினர் வெற்றி

59 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் வழிகாட்டலுக்கமைய 593 படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் அனைத்து படைப் பிரிவு மற்றும் படையணிகளின் படைப் பிரிவுகளிடையே படையினர்களின் நட்பு ரீதியான உறவுகள் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை 593 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் நடைப் பெற்றன.

அதற்கமைய 59 ஆவது படைப் பிரிவில் பணியாற்றும் விளையாட்டு அணியினர் மற்றும் 593 படைப் பிரிவின் 19 ஆவது கெமுனு ஹேவா படையணி ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி (06) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது. இப்போட்டியில் 593 ஆவது படைப் பிரிவின் விளையாட்டு அணி மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் விளையாட்டு அணி இணைந்து ஆடியதில் இறுதியில் 593 ஆவது படையின் விளையாட்டு அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டு பதக்கங்களை பிரதான அதிதியவர்களினால் பெற்றறுக் கொண்டனர்.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக கலந்து கொண்ட 591 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களை 593 படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் மிகிந்து பெரேரா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

இவ் சிறந்த ஒரு சவாலான இக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் 593 ஆவது படைப் பிரிவின் 19 ஆவது கெமுனு ஹேவா படையணியினர்கள் 75 ரன்கள் பெற்று வெற்றிப்பெற்றனர். அந்த வகையில் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக 593 ஆவது படைப் பிரிவின் கோப்ரல் உதயகுமார அவர்களும் ஆட்ட வீர்ராக லான்ஸ் கோப்ரல் ஹேமச்சந்திராவும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளராக 593 ஆவது படைப்பிரிவின் மேஜர் நந்த டயஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இப்போட்டியை T 20 யில் பெரும் திரலானோர் பார்வையிட்டனர்.Sports brands | Men's Footwear