Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2018 13:03:09 Hours

கெமுனு ஹேவா படையணியினரின் ஒத்துழைப்புடன் சூரிய மங்கள புத்தாண்டு நிகழ்வுகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியினரால் ஓழுங்கமைக்கப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது (07) ஆம் திகதி சனிக்கிழமையன்று குருவிட்ட கெமுனு ஹேவா படையணி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியினரால் பல பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் இடம் பெற்றனர்.

இந் நிகழ்விற்கு இராணுவ பதவி நிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் எண்ணக்கருவற்கமைய இடம் பெற்ற இந்த புத்தாண்டு நிகழ்விற்கு பிரதான அதிதியாக மின்னேரிய காலாட் பயிற்ச்சி நிலையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஸஜய அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஆதனைத் தொடர்ந்து சம்பிரதாயத்தின் படி மங்கள விளக்கேற்றியதன் பின் இந் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த கெமுனு ஹேவா படையணியின் படையினருக்கு பிரதான அதிதி உடபட அனைத்து படையினர்களாளும் பிரதேசவாசிகளாளும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது.

ஆதனைத் தொடர்ந்து இந் நிகழ்வில் பனிஸ் சாப்பிடுதல், தெசிக்காயை தே கரண்டியின் நடுவில் வைத்து கொண்டு செல்லல், ஓலைப் பின்னுதல், சைக்கில் ஓட்டம், யாணைக்கு கண் வைத்தல் வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய, கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல், போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றது.

இந்த புத்தாண்டு நிகழ்வு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி அனைவருக்கும் மதிய உணவு வழங்கியதை தொடர்ந்து இப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.

இப் புத்தாண்டு நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் மற்றும் சிவில்; கிராமவாசிகளும் கலந்து கொண்டார்கள்.

spy offers | Sneakers Nike Shoes