Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 17:31:04 Hours

622 ஆவது படையினர் வெலி ஓயா பிரதேச மக்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

இனிய புத்தாண்டை வரவேற்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப்பிரிவின் 622 ஆவது படையினரால் கெலஒவெவ,சிங்கபுர,ஜனகபுர,நெழும்வெவ மற்றும் கிரிஇப்பத்வெவ பிரதேச மக்களுக்காக இப் புத்தாண்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டது இந் நிகழ்வானது கடந்த (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை வெலிஓய கெலவெவயில் அமைந்துள்ள 622 ஆவது படைப் பரிவு விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இப் புத்தாண்டு நிகழ்விற்கு சினர்ஜி டெக்நொலஜி தினைக்களத்தின் தலைவரான கிஷாந்த பிரசன்ன அவர்கள் அனுசரனை வழங்கியதோடு இப் புத்தாண்டு நிகழ்விற்கு 622 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி கேர்ணல் சாலிய அமுனுகம மற்றும் 9 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் மஞ்சுல சில்வா மற்றும் 27ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் புத்திக்க ஜயசூரிய உட்பட் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இப் படையணியினரால் இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.

622 ஆவது படைப் பரிவின் கட்டளைத் தளபதியவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த பிரதான அதிதியான 62 ஆவது ஆவது படைப் பரிவின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க கலந்து கொண்டதோடு 62 ஆவது ஆவது படைப் பரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் 500 க்கும் மேற்பட்ட பிரதேச மக்களும் கலந்து கொண்டார்.

buy shoes | Nike Shoes