Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 18:10:26 Hours

ஆபத்தில் இருந்த நான்கு உயிர்களை காப்பாற்றிய இலங்கை இராணுவ தேசிய பாதுகாப் படையணியின் லார்ஸ் கோப்ரல்

கொழும்பு – கதிர்காமம் பிரதான பாதையின் அம்பலந்தொட்ட பிரதேசத்தின் அழுத் பார சந்தியில் (16) ஆம் திகதி திங்கட கிழமை இடம் பெற்ற வீதி விபத்தில் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி முகத்துக்கு முகம் மோதியதில் முச்சக்கர வண்டி பஸ் வண்டியில் சிக்குண்டது. அப்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேர்கள் உயிருக்கு போரடும் சந்தர்ப்பத்தில் கதிர்காமம் காவன்திஸ்ஸபுர பிரதேசத்தின வசிக்கும் 3ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப் படையணியின் இராணுவ வீரரால் காப்பாற்றப்பட்டனர்.

குறித்த முச்சக்கர வண்டியில் சிறுக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தினரும் கதிர்காமம் சென்று திரும்ப பயணிக்கும் போது கதிர்காம் நோக்கி சென்ற பஸ்சுக்கு பின்னாடி சென்ற முச்சக்கர வண்டி பஸ் சக்கரத்தில் சிக்குண்டு கிடந்த நான்கு உயிர்களும் உதவியை தேடினார்கள்.

கதிர்காமம் சென்ற பஸ் வாகனத்தில் பயனத்தை மேற் கொண்ட 3ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப் படையணியின் இராணுவ வீரரான லார்ஸ் கோபரல் எம்.ஜீ சந்தன அவர்கள் தனது உயிரை பணயம் வைத்து பஸ் சக்கரத்தில் சிக்குண்ட சிறு குழதையை முதலில் காப்பாற்றினார் அதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக அவர் மற்றவர்களிடம் இருந்து உதவியை கேட்டார். அச் சந்தர்ப்பத்தில் அவர்களின் உடைகளிலும் தீ பற்றியிருந்தது மற்றவர்களின் உதவியுடன் நீர் கொணர்ந்து முதலில் தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து எல்லோரும் ஒன்றாக பஸ்ஸை தள்ளி நான்கு உயிர்களை காப்பாற்றினர்.

புத்தியுடன் செயட்பட்ட லார்ஸ் கோபரல் எம்.ஜீ சந்தன அவர்கள் இந்த திடிர் விபத்து ஏற்பட்டதை உடனடியாக தனது கட்டளை அதிகாரிக்கு தெரிவித்து கொண்டதுடன் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு இராணுவ குழுவை தளபதி அனுப்பி வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

எனினும் லார்ஸ் கோபரல் எம்.ஜீ சந்தன உட்பட் இராணுவத்தினரால் பாதிக்கப்பட்வர்கள் உடனடியாக ஹம்பந்தோட வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந் விபத்தில் வேறு உயிர் ஆபத்து ஏற்படவில்லை என்று அம்பலன்தோட்ட பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டனர்.

இந்த விபத்தில் தீப் பிடித்த முச்சக்கர வண்டியில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து லார்ஸ் கோபரல் எம்.ஜீ சந்தன உட்பட இலங்கை இராணுவ தேசிய பாதுகாப் படையணி மற்றும் அம்பலன்தோட்ட பொலிஸ் நிலையமும் நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

Sports brands | New Balance 991 Footwear