Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2018 22:00:44 Hours

‘செனெஹச கமட’’ குழந்தைகளுக்கு விசேட தேவையுள்ள சிறார்களுக்கான மருத்துவ சேவைகள்

செனெஹச கமட’’ எனும் திட்டத்தின் கிழ் செனெஹச கல்வி மற்றும் வளம் ஆராச்சி தகவல் மையம் அகியவற்றினால் முப்படைகள் மற்றும் பொலிஸ் சிவில் பாதுகாப்பு சேவைகளின் விசேட தேவையுள்ள சிறார்களுக்கான சிறப்பான மருத்துவ சேவையை கடந்த மார்ச் மாதம் 23-24ஆம் திகதிகளில் கஹாவத்த மற்றும் ரத்னபுர சுமன மகளிர் வித்தியாலயத்தில் மருத்துவ ஆலோசக நிபுணத்துவக் குழுவினர்களினால் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பாதுகாப்பு சேவைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சிறப்பு மருத்துவம் வழங்கப்பட்டது.

இந்த சேவையானது ரணவிரு சேவா அதிகார சபையினரின் அனுமதியுடன் பாதுகாப்பு அமைச்சின் ஆணுசரனையோடு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இத் திட்டமானது இந்த குழந்தைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு முழுமையான சிகிச்சைமுறைகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி செனெஹச கல்வி மற்றும் வளம் ஆராச்சி தகவல் மையம் நாரஹென்பிட்டயில் இவ்வாறன சேவைகளை செய்வதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் போது பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிலர் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவ சேவையில் கலந்துகொள்ளாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத் திட்டமானது செனெஹச கல்வி மற்றும் வளம் ஆராச்சி தகவல் மையத்தின் அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஏ.இ.எஸ் பிரசன்ன குமார் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ரத்னபுர பொலிஸ் மா அதிபர் பிரதீப் வெத்தசிங்க மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

short url link | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE