07th March 2018 11:02:24 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தேசிய மிதிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் அழைப்பையேற்று வருகை தந்த விஷேட மிதிவெடி அகற்றும் தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் (Mired Raad Zeid Al-Hussein) (6) ஆம் திகதி காலை யாழ்ப்பாண முகமாலை மிதிவெடி அகற்றும் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். அங்கு இராணுவ மிதிவெடி அகற்றும் பிரிவினர் (SLA-HDU) மிதிவெடி அகற்றும் உபகரணங்கள், வெடிமருந்துகளை கண்டு பிடிக்கும் பயிற்சி பெற்ற நாய்களும் (MDDs) இந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உரிய நிபந்தனைகளுக்கு இராணுவத்தினர் தங்களது விருப்பங்களை தெரிவித்தனர்.
மிதிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை 163 ஆவது அங்கத்துவ இடத்தை பிடித்துள்ளது. இந்த மிதிவெடி அகற்றும் தூது குழுவினர் எமது நாட்டிற்கு வந்துள்ளது எமக்கு முக்கிய விடயமாகும்.
இந்த தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் (Mired Raad Zeid Al-Hussein) உடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை பிரதிநிதித்துவபடுத்தி சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் கௌரவத்திற்குரிய அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், விஷேட தூது குழுவின் பணிப்பாளர் யுவான் காலோஸ் ரூஅன் (Mr Juan Carlos Ruan), பிரதி பணிப்பாளர் லெயிலா ரொத்ரிகூஸ் (Ms Laila Rodriguez), சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் (கலாநிதி) பொன்னையா சுரேஷ், ராஜ தந்திரிகள் , ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், வெளிநாட்டு அதிகாரிகள், மதிவெடி அகற்றும் விவகார அமைச்சின் பிரதானி கே.ஜீ.எம்.பீ விக்ரமசிங்க, இலங்கை மிதிவெடி அகற்றும் நிகழ்ச்சி பிரதிநிதி வித்யா அபேகுணவர்தன, , ஐக்கிய நாட்டு அமைப்பின் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ஹிகான் இந்திரகுப்த (Mr Gihan Indraguptha) இந்த விஜயத்தில் பங்கேற்றுக்கொண்டனர்.
இலங்கை இராணுவ மிதிவெடி அகற்றும் பிரிவினால் (SLA-HDU) ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மிதிவெடி அகற்றும் பணிகளின் ஒத்துழைப்பு நிமித்தம் தூது குழுவின் தலைவர் இராணுவத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்த துடன் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இந் நிகழ்விற்கு வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் எந்திரிகள் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் அமித் செனெவிரத்ன அவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.
மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு தேவையான அதி சிறப்பு வாய்ந்த உபகரணங்களை சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சிற்கு எதிர்காலத்தில் பெற்றுத் தருவதாக இந்த தூது குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
விஷேட பிரதிநிதிக் குழுவின் பிரதானி இலங்கை எந்திரிகள் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட மிதிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து இந்த மிதிவெடி அகற்றும் பணிகளுக்கான அனைத்து வசதிகளும் பெற்றுத் தருவதாக இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தின் போது அமைச்சர் மற்றும் மிதிவெடி விஷேட பிரதானி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் வரவேற்கப்பட்டனர். மேலும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, எந்திரிகள் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் அமித் செனெவிரத்ன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது முகமாலை பிரதேசங்களில் இராணுவ மிதிவெடு அகற்றும் பிரிவினரால் 77% மிதிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரிகேடியர் அமித் செனெவிரத்ன அவர்களினால் இந்த விஷேட மிதிவெடி தூதுக் குழுவின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் மிதிவெடி அகற்றும் குழுவினர் சர்வதேச மதிவெடி அகற்றும் நிறுவனங்களான SHARP, DASH, HALO கண்காணிப்பதுடன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் (Mired Raad Zeid Al-Hussein) யாழ் மாவட்ட அரச அதிபருடன் பேச்சுவார்த்தையும் மேற்கொண்டார்.
மேலும் இவர் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌரவத்திற்குரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ,வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, ஐக்கிய நாட்டு அமைப்பின் பிரதிநிதிகள், சர்வதேச அற்ற அமைப்பின் உயரதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
2017 ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 1,223.36 அடி வர்க கிலோ மீற்றர் பிரமானமான இடங்களிலிருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டின் போது மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முழுமையாக அகற்றப்பட்டன.
இந்த மிதிவெடி அகற்றும் பணிகளின் போது 735,444 மிதிவெடிகள், 2073 யுத்த டாங்கி குண்டுகள், 556,385 வெடி மருந்துகள் 2017 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டன. இலங் மிதிவெடி அகற்றும் பிரிவு (SLA-HDU) Delvon Association for Social Harmony (DASH), Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP), Mine Advisory Group (MAG) மற்றும் Hazardous Area Life Support Organization (HALO Trust) நிறுவனங்கள் இணைந்து இந்த மிதிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டன.
சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் கீழ் 2010 அம் ஆண்டு தேசிய மிதிவெடி மத்திய நிலையம் அமைக்கப்படும்.
இராணுவ மிதிவெடி அகற்றும் பயிற்சி பெற்ற இலங்கை எந்திரகள் படையணியைச் சேர்ந்த நாய்கள் 2012, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் US Marshal Legacy Institute நிறுவனங்களில் சிறந்த மிதிவெடி அகற்றும் சிறப்பு நாய்களாக விருதுகள் பெற்றுள்ளன.
மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு SKAVITA Humanitarian Assistance மற்றும் Relief Project (SHARP) and Delvon Assistance for Social Harmony (DASH) இலங்கை இராணுவ மிதிவெடி அகற்றும் பிரிவினர் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.
இலங்கை மிதிவெடி அகற்றும் பிரிவுகளில் 10 பயிற்சி பெற்ற நாய்களும், MV4 flails 4 பேரும் , மதிவெடி அகற்றும் படை வீரர்கள் 307 பேரும் , F3 Mine Lab Detectors 226 பேரும், Bozena Flails 4 பேரும் , Flail operators 31 பேரும் , இந்த நாய்களுக்கான வைத்திய சிகிச்சை உதவி யாளர்கள் 20 பேரும் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
spy offers | Footwear