Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2018 15:03:15 Hours

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபாடு

இராணுவத்தளபதியவர்களின் 3/1 பங்கிலான இராணுவத்தினர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சமூக நலன்புரித் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவர் எனும் கூற்றிக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 500ற்கும் மேற்பட்ட மத்திய அளவிலான நீர் சுத்திகரிப்பு வடிகாண்களின் பல்வகைப்பட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக இராணுவப் பொறியியலாளர்ப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதிச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் படையினரின் பங்களிப்போடு சிரிசர பிவிசும எனும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தில் 15 வடிகாண்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுகள் படையினரின் உதவியோடு பூரணமாக்கப்பட்டு இன்று (5) முடிவிற்கு வந்தடைந்தது.

மேலும் இச் சிரிசர பிவிசும எனும் திட்டத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் நிரஞ்சன் ராமநாயக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் கோமரண்கடவல >படவி ஸ்ரீ புர > கந்தலாய் மொரவெவ மற்றும் பெமதுவ போன்ற பிரதேசங்களில் கிட்டத் தட்ட 10 மத்திய அளவிளான வடிகாண்கள் முப் படையினரின் உதவியோடு திருத்தப்பட்டது. ஐந்து வருட மேம்பாட்டு திட்டத்தில் கிட்டத் தட்ட 100 புதிய தேவைப்பாடுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவ பொறியியலாளர்ப் படையினர் தமது முழு ஒத்துழைப்பையூம் வழங்கும் நோக்கில் 100 கனரக வாகனங்கள் மற்றும் 4000ற்கு மேற்பட்ட முப்படையினர் இத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதே வேளை ஜனாதிபதிச் செயலகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இராணுவப் பொறியியலாளர்ப் படையினரால் திருகோணமலை மாவட்டத்தின் கரடியன - கும்புறுயாய போன்ற பிரதேசங்களில 250 கிமீ நீளமான கம்பி வேலிகள் யானைகள் உட்பிரவேசி;க்காத வண்னம் அமைக்கப்படுகின்றது. அத்துடன் கோமரண்கடவல எனும் பிரதேசத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்ற பிரதேசமாகையால் கிட்டத் தட்ட 30கிமீ துார அளவிலான கம்பி வேலிகள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் பொறியியலாளர்ப் படையினர் இவ் ஐ வருடத் திட்டத்தில் வீதிப் புணரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதுடன். மேலும் டிசெம்பர் மாத முடிவில் இப் படையினர் கந்தலாவை – சாலியபுர வீதி (7கிமீ) மற்றும் ரணதுங்க கடே வீதி (5கிமீ) போன்றவற்றை இத் திட்டத்தின் மூலம் புணரமைத்துள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதிச் செயலகத்தின் தலைமையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக் கிணங்க சிரிசர பிவிசும >வனரோப >வச விச நத்தி ரடக் >ரஜரட நவோதய மற்றும் பிபிதெமு பொலன்நறுவை போன்ற சர்வதேச திட்டங்கள் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதுடன் இராணுவப் பொறியியலாளர்ப் படையினர் இப் பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதியவர்களின் 3/1 பங்கிலான இராணுவத்தினர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சமூக நலன்புரித் திட்டங்களில் ஈடுபடுத்லைமையமாக கொண்டே ,டம்பெற்றது.

அந்த வகையில் ரஜரட்ட நவோதய >பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் நிரஞ்சன் ராமநாயக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் இராணுவ பொறியியலாளர்ப் படையினர் >கடற் படையினர் மற்றும் விமானப் படையினர் போன்றௌரின் பங்களிப்போடு 7பிரதேச செயலகங்களை உள்ளடக்கிக் காணப்படுகின்ற பாடசாலைகள் >மத வழிபாட்டுத் ஸ்தலங்கள் >சுகாதார மையங்கள் >தொல்பொருளியல் இடங்கள் >கேட்போர் கூடங்கள் மற்றும் விளையாட்டுத் ஸ்தலங்கள் போன்றவற்றில் முன்னெடுக்கப்படுவதுடன் சீன அனுரசடையூடனான விசேட திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ் ஐ வருட அபிவிருத்தி வேலைத்திட்டற்காக 5000 மில்லியன் ருபாவில் இவ்வாறான இராணுவத் திட்டங்களிற்காக 1000 மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இத் திட்டங்கள் 2021ஆம் ஆண்டு நிறைவு பெறவுள்ளது.

அந்த வகையில் இத் திட்டமானது ஜனாதிபதிச் செயலகத்தின் விசேட கண்காணிப்பில் கிராம அபிவிருத்தி அதிகாரிகள் > கிராம சேவகர்கள் >சமூர்த்தி அதிகாரிகள் மத்திய சூழல் பாதுகாப்பு >மொரட்டுவைப் பல்கலைக்கழகம் விவசாய நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் போன்றௌரின் பங்களிப்போடு இடம் பெறுகின்றது.

மேலும் ஜனாதிபதிச் செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இத் திட்டமானது நாடு முழுவதிலும் உள்ள கிராமப் புர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் படையினரின் பங்களிப்போடு இடம் பெறுகின்ற இத் திட்டமானது 2021ஆம் ஆண்டு நிறைவு பெறவுள்ளது.

மேலும் இப் பணிகளில் பொறியியலாளர்ப் படையினர் ஈடுபடுத்தப்பட்டதுடன் 100 கனரக வாகனங்கள் மற்றும் 4000ற்ம் மேற்பட்ட முப் படையினர் இப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இப் பொறியியலாளர்ப் படையினர் வட மேற்க்கின் மஹாவ பிரதேச செயலகப் பிரிவின் திபிரியகெதர மஹாவெவ பிரதேசத்தின் பலதரப்பட்ட பாடசாலைகள் கட்டடங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் தமது பணிகளை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மஹாவெலி அதிகாரசபை >மத்திய சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் அனுமதியோடு வில்பத்து பிரதேசத்தில் தப்போவ எனும் பிரதேசத்தில் 50 ஹெக்டேயர் பரப்பளவில் கலப்பு ஆந்தர எனும் தாவரவியல் கன்றுகள் நடப்படுகின்றன.

அத்துடன் வனரோப போன்ற சர்வதேச திட்டங்களில் வடக்கு மேற்கு மத்திய மற்றும் வட கிழக்கு போன்ற மாகானங்களில் வில்பத்து பிரதேசங்கள் உள்ளடங்களாக இடம் பெறுகின்றன. அவை மட்டுமன்றி இத் திட்டமானது அனைத்து மாகானங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் உலகலாவிய ரீதியில் காணப்படுகின்ற முகாம்களில் பரிசர நியமு - ஹரித செபலா எனும் தலைப்பிலான திட்டம் இராணுவ விவசாயப் பணிப்பகத்துடன் இணைந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் ஜுன் - டிசெம்பர் 2017 கிட்டத் தட்ட 18 000 மரக் கன்றுகள் முகாம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் இராணுவ விசசாயப் பணிப்பகத்தின் பணிப்பளாரான பிரிகேடியர் புவனேக குணரத்தின அவர்களின் தலைமையில் வச விச நதி ரட்டக் எனும் தலைப்பின் கீழ் கந்தக்காடு பிரதேசத்தில் 100ஏக்கர் பரப்பிலான பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் 32% வனப் பிரதேசத்தை மேம்படுத்தலாகும்.

அத்துடன் கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57ஆவது படைப் பிரிவால் அன்மையில் 125 000 பெறுமதியான மரக் கன்றுகள் பொதுமக்களின் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்டன.

Adidas footwear | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today