13th October 2024 19:04:28 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 33 வது பிரதித் தளபதியான ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் தனது புகழ்பெற்ற பதவிக்காலத்தின் பின்னர் 2024 ஒக்டோபர் 8 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது பிரியாவிடை நிகழ்வு இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை முதன்மை பதவி நிலை அதிகாரி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி மற்றும் தொண்டர் படையணியின் தலைமையகப் படையலகின் கட்டளை அதிகாரி ஆகியோர் வரவேற்றனர். சம்பிரதாயங்களுக்கமைய வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் பிரியாவிடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சிரேஷ்ட அதிகாரிகளுடன், வெளிச்செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவுச் சின்னத்தில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பயிற்சிப் பரிசோதகர் பிரிகேடியர் ஜேஎம்டிஎன்பி கருணாதிலக்க அவர்கள் வெளிச்செல்லும் பிரதித் தளபதியை அணிவகுப்பு மரியாதை மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தேசபக்தி பாடல்களின் ஒலிகளுக்கு மத்தியில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பீ. சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் அவரது சேவையின் நிரந்தர நினைவுப் பரிசாக அவரது உருவப்படத்தை அவரது அலுவலகத்தில் திறந்து வைத்தார். ரெண்டெஸ் அரங்கில் படையினருக்கான உரையின் போது தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கான தனது நோக்கங்களை அடைவதில் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு வழங்கியமைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
உரையின் பின் அவர் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக கையளித்ததன் அடையாளமாக தொண்டர் படையணி தலைமையக பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
வெளிச்செல்லும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பி. சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்களை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரதான வாயிலுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் வரிசையாக நின்று ஆரவாரத்துடன் பிரியாவிடை அளித்தனர்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பி. சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்களின் 36 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியில், இலங்கை பீரங்கிப் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற முறையான பிரியாவிடை இரவு விருந்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.