12th October 2024 18:21:31 Hours
2024 ஆம் ஆண்டில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கலாசார சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. 2024 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவிலிருந்து 119 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பைப் பெற்றனர்.
மறுநாள், வருகை தந்த இந்தியப் படையினர், தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் ஹக்கல தாவரவியல் பூங்கா, ஒன்பது வளைவுகள் பாலம், இராவண நீர்விழ்ச்சி, மற்றும் பண்டாரவளை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இரு தரப்பினரின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.