10th October 2024 15:48:47 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் ஓர் அதிகாரி மற்றும் நான்கு சிப்பாய்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை 02 ஒக்டோபர் 2024 அன்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வழங்கினார். 2024 செப்டம்பர் 30, அன்று நில்வலா ஆற்றில் தற்கொலை முயற்சியில் இருந்து ஒரு நபரைக் காப்பாற்றியதற்காக அவர்களின் வீரச் செயலுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
படையினரின் உடனடியாக பதிலளித்து தற்கொலை முயற்சியில் இருந்து நபரைக் காப்பாற்றினர். மேஜர் எஸ்.இந்திக, சார்ஜன் ஏ.டி.தலுவத்த, காலாட் சிப்பாய் டி.எம்.யு.எஸ்.ஜயசிங்க, காலாட் சிப்பாய் டபிள்யூ.எம்.எஸ்.வர்ணகுலசூரிய, காலாட் சிப்பாய் எல்.டீ.லக்மால் ஆகியோரைக் கொண்ட மீட்புக் குழு, அவர்களின் விரைவு மற்றும் துணிச்சலுக்காக பாராட்டப்பட்டதுடன் இது இலங்கை இராணுவத்திற்கு பெரும் பெருமை சேர்த்தது.
இந் நிகழ்வின் போது மேற்கு தளபதி அவர்கள் துணிச்சலான செயல்களுக்கு தனது பாராட்டுதலைத் தெரிவித்ததோடு, அவர்களின் அர்ப்பணிப்பு இராணுவத்தின் தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை எடுத்துரத்தார். அவர்களது முயற்சிகள் சக இராணுவ வீரர்களுக்கும், ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் உத்வேகமாக இருப்பதனையிட்டும் பாராட்டினார்.