Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2024 22:25:07 Hours

512 வது காலாட் பிரிகேட் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தம்

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 512 வது காலாட் பிரிகேட்டினரால் 2024 ஒக்டோபர் 4 ம் திகதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இத் திட்டம் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் 512 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையில் மாசடைந்த கரையோரப் பகுதியின் 3 கிலோமீற்றர் தூரம் சிரமதான ஊடாக சுத்தப்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் கடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன் வடமாகாண ஆளுநர், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்