06th October 2024 14:24:55 Hours
563 வது காலாட் பிரிகேட் தனது 27வது ஆண்டு விழாவை 2024 ஒக்டோபர் 4 அன்று பெருமையுடன் கொண்டாடியது. அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியில் கொடி ஆசிர்வாதம் மற்றும் பாற்சோறு வழங்கல் உட்பட பல நிகழ்வுகளை பிரிகேட் படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், அலகல்ல பொட்டுக்குளம் விராம முனிவரின் சிறார்களுக்கு பாடசாலை பொருட்கள் விநியோகிக்கப்பட்டதுடன், யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்தவர்கள் மற்றும் யுத்தத்தின் போது காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வரும் இராணுவத்தினர் உட்பட சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு வீரர்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கும் வகையில் ‘பிரித்’ பாராயணம் நிகழ்வும் இடம்பெற்றது.
இராணுவ மரபுகளுக்கமைய, 563 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சி.பி. ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் மரக்கன்று நடுகையில் இணைந்துகொண்டார்.
பிரிகேடின் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் தளபதி பிரிகேட் படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில் 563 வது காலாட் பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வை புனிதமானதாகவும் மறக்கமுடியாத நிகழ்வாகவும் கொண்டாடினர்.