06th October 2024 14:29:15 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 221, 222, மற்றும் 223 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் படையலகுகளுக்கு 2024 செப்டம்பர் 18 தொடக்கம் 20 வரையான திகதிகளில் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயங்களின் முதன்மை நோக்கம், பிரதேசத்தில் படையினரின் நிலைநிறுத்தம் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் பணிகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.
சம்பிரதாயமான இராணுவ மரபுகளுக்கு அமைவாக, மேஜர் ஜெனரல் உடுகம அவர்கள் ஒவ்வொரு தலைமையகத்திலும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந்த விஜயத்தின் போது படையினர்களுக்கான உரை, ஒவ்வொரு தலைமையகத்தின் செயல்பாட்டு பகுதிகள் பற்றி பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் விரிவான விளக்கங்கள் என்பன அடங்கியிருந்தன.