Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2024 18:50:40 Hours

போர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக 02 ஒக்டோபர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், வளாகத்தில் மாங்கன்று ஒன்றையும் நட்டார். மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து, அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

படையினருக்கான உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்கள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.