Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2024 15:42:18 Hours

12 வது காலாட் படைப்பிரிவினரால் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

2024 ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, களுத்துறை வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தின் (ஆஸ்திரேலியக் கிளை) அனுசரணையுடன், மேஜர் பி.ஏ.ஜே புஷ்பகுமார ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 12 வது காலாட் படைப்பிரிவினால் ஹெலகம ஆரம்பப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் முனசிங்க ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கும் ஹெலகம ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கும் பாடசாலை காலணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.