02nd October 2024 13:53:24 Hours
4 வது கவச வாகனப் படையணி அதன் 33 வது ஆண்டு விழாவை 24 செப்டம்பர் 2024 அன்று தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
போதி பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின, பின்னர் படையணி மற்றும் அதன் பணியாளர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சர்வமத நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போர்வீரர் நினைவு நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ஆண்டு விழா நாளில் கட்டளை அதிகாரியை கௌரவிக்கும் வகையில் படையலகினால் அணிவகுப்பு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, பயிற்சி, நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் நினைவாக, கட்டளை அதிகாரி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்ததுடன், புதிய அதிகாரிகள் தங்கும் வசதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
அனைத்து நிலையினருக்கமான மதிய உணவுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.