02nd October 2024 13:56:36 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2024 செப்டம்பர் 27 அன்று 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
தனது விஜயத்தின் போது, காலம் முழுதும் உயர் மட்ட தொழில்சார் நிபுணத்துவத்தை பேணிய அனைத்து நிலையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். சிரேஷ்ட அதிகாரி தனது உரையைத் தொடர்ந்து, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.