Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2024 06:50:00 Hours

மாதுருஓயாவில் விசேட படையணியின் அடிப்படை பாடநெறி இலக்கம் 55 இன் பட்டமளிப்பு விழா

விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி இலக்கம் 55 இன் பட்டமளிப்பு விழா 2024 செப்டெம்பர் 28 மாதுருஓயா விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

இப்பாடநெறியில் 6 அதிகாரிகள் மற்றும் 127 அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் 04 மார்ச் 2024 அன்று பாடநெறி ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.