Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2024 11:05:00 Hours

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அதன் கட்டளை பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு விஜயம்

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 591 வது காலாட் பிரிகேட், 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 இலங்கை சிங்க படையணி ஆகியவற்றிற்கு 25 செப்டம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.ஜே உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இந்த விஜயமானது படையலகு பற்றிய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விளக்கத்துடன் ஆரம்பமாகியதுடன், குருந்தூர்மலை தொல்லியல் தளத்தையும் பார்வையிட்டார்.

காலாட் படைப்பிரிவின் தளபதி தனது கருத்துக்களை விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எழுதியதுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்க்கள் கலந்துகொண்டனர்.