24th July 2024 16:49:36 Hours
1996 ஜூலை 18 முல்லைத்தீவு தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் முகமாக 2024 ஜூலை 17 முல்லைத்தீவு முகாம் போர் நினைவு தூபியில் 14 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இத் நிகழ்வு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சிங்கப் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நினைவுத்தூபியில் நித்திய சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தி உயிர்நீத்த மாவீரர்களை கௌரவித்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் தங்களது மரியாதையை செலுத்தி, நிகழ்வை வெகு உயர்வாகவும், கெளரவத்துடனும் நிறைவுசெய்தனர்.