Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2024 16:58:46 Hours

இலங்கை கிரிக்கெட் அணிக்கு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் விரிவுரை

இலங்கை கிரிக்கெட்டின் அழைப்பின் பேரில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு, 'ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் தேசபக்தி மற்றும் அர்ப்பணிப்பு' என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் விரிவுரையை 23 ஜூலை 2024 அன்று நிகழ்த்தினார்.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கு இன்றியமையாத வெற்றிகரமான மனநிலையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவுரை நிகழ்தியதுடன், கிரிகெட் வீரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இதன் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.