24th July 2024 09:46:40 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் பிரிகேடியர் ஏ.எம்.ஏ. அபேசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் உள்ள விடுதி மற்றும் காணி பணிப்பகத்தின் 26 வது பணிப்பாளராக 2024 ஜூலை 22 அன்று அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மத அனுஷ்டானங்களை தெடர்ந்து புதிய பணிப்பாளர் பல சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் முறையான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.