Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2020 13:48:02 Hours

மேஜர் ஜெனரல் செனரத் பண்டார யாழ் புதிய படைத் தளபதியாக பதவியேற்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்களுக்கு 12 ஆவது கெமுனு காலாட் படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்கள் மகா சங்க தேரர்களின் ஆசிர்வாதத்துடன் ‘செத் பிரித்’ வழிபாடுகளின் பின்பு தனது புதிய பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இவர் இலங்கை இராணுவத்தில் 34 வருட காலம் சேவைகள் ஆற்றி இராணுவத்திலுள்ள அதி உயர் விருதான ‘ரன விக்ரம பதக்கம் மும்முறையும், ‘ரன சூர பதக்கம் இரு தடவையும், ‘தேச புத்திர சம்மானங்கள்’ மூன்று தடவையும் பெற்றுள்ளார்.

இந்த உயரதிகாரி 5 ஆவது கெமுனுப் படையணியின் கட்டளை அதிகாரியாகவும், காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும், 57 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் பதவிநிலை பதவியிலும், 572, 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், இராணுவ தலைமையக சுயாதீன பணியகத்தின் பணிப்பாளராகவும், 61, 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் இடமாற்றம் பெற்று சென்றதை முன்னிட்டு மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் புதிய யாழ் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | Air Jordan Sneakers